Tamilnadu
"தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு இருப்பது முக்கியம்" - மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து!
2024-25-ஆம் கல்வியாண்டிற்கான மார்ச்/ஏப்ரல் - 2025 பொதுத் தேர்வுகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு 03.03.2025 முதல் 25.03.2025 வரையும், மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு 05.03.2025 முதல் 27.03.2025 வரையும், பத்தாம் வகுப்பிற்கு 28.03.2025 முதல் 15.04.2025 வரையும் நடைபெறவுள்ளது.
இதில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 தேர்வர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 தேர்வர்களும், மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 9,13,036 தேர்வர்களும் தேர்வெழுதவுள்ளனர்.அதன்படி நாளை (மார்ச் 03) 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில் மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், " தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில்களை எழுதுங்கள். எவ்வித பதட்டமும் வேண்டாம்.படிக்கிற ஆர்வத்துடன் உங்கள் உடல்நலன் மீதும் கவனம் செலுத்துங்கள்.தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம். தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்தும்! " என்று கூறப்படுவது.
Also Read
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!