Tamilnadu
கூட்டாட்சிக்கு எதிரானது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா : நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் திமுக MP பேச்சு!
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மீது ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் 3-ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யூ.யூ.லலித் பங்கேற்று தனது கருத்துக்களை முன் வைத்தார்.
அப்போது அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்களில் சில குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினார். மேலும் பேசிய யூ.யூ.லலித், மாநில சட்டமன்றங்களின் காலத்தை இயற்கைக்கு எதிராக 5 ஆண்டுகளுக்கு முன்பாக கலைக்க முடியாது. அப்படி குறைப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நீதிமன்றத்திற்கு செல்லும் போது இந்த மசோதா ரத்து செய்யப்படும்.” என எச்சரிக்கை செய்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி MP,”சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை சீர்குலைப்பதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்களின் உரிமையை பறிக்கும் செயல்.” என தனது கட்சியின் எதிர்ப்பை பதிவு செய்தார்.
அதேபோல் தி.மு.க MP வில்சன்,””ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குளறுபடிகள் நிறைந்ததாக உள்ளது. இம்மசோதாவை நிறைவேற்ற கூடாது. தமிழ்நாடு ஆளுநர் போன்ற ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தால் அது ஆபத்தானதாக அமையும். தேர்தல் முடிந்த பின்னர் 82-வது விதிப்படி குடியரசுத் தலைவர் அறிவிப்பு வெளியிடாவிட்டால் அல்லது காலதாமதம் செய்தால் பெரும் சிக்கல் உருவாகும். கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா" என வலியுறுத்தினார்.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!