Tamilnadu

”Sadist அரசு” : ரயில்களில் Unreserved பெட்டிகள் குறைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இந்தியாவில் மிக முக்கிய போக்குவரத்துறைகளில் ஒன்று ரயில்வே. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் வெளிமாநிலங்களை இணைக்கக்கூடிய பிரதான போக்குவரத்தும் ரயில்வேதான்.

அதிகம் மக்கள் பயன்படுத்தும் இந்த போக்குவரத்து துறையை ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு சிதைத்து வருகிறது. குறிப்பாக ரயில்வே துறைக்கு என்று இருந்த தனி பட்ஜெட்டை பா.ஜ.க அரசு நீக்கியது. மேலும் ரயில்வே துறைக்கு என்று கடந்த இரண்டு பட்ஜெட்டிலும் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவிலை.

சமீபவருடங்களாகவே முன்பதிவு செய்யாதபெட்டிகளில் அதிகமான மக்கள் இடநெறுக்கடிக்கு மத்தியிலும் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் முன்பதிவு பெட்டியலும் இவர்கள் ஏறி பயணம் செய்ய வேண்டிய நிலையுள்ளது. இதனால் முன்பதிவு பெட்டியில் செல்பர்களுக்கும், முன்பதிவு செய்யாமல் பயணம் செய்பவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்படுகிறது.

இது தொடர்பான வீடியோக்கள் தினந்தோறும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் மக்களின் சிரமங்களை போக்கும் வகையில் முன்பதிவு செய்யாத பெட்டிகளை அதிகபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக குறைத்துள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் AC 3 Tier பெட்டிகளை இணைக்க ஒன்றிய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. யாருக்கானது இந்த அரசு என்பது இதில் இருந்தே தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில்,” சமூக வலைத்தளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம். அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் : செல்வபெருந்தகை அறிவிப்பு!