Tamilnadu
நகராட்சி நிர்வாகத்துறை தமிழ்நாட்டில் நல்ல முறையில் வளர்ந்து தேவைகளை பூர்த்தி செய்கிறது- அமைச்சர் KN நேரு!
சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் கூட்ட அரங்கில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது...
கூட்டத்தில் அமைச்சர்கள் ஆவடி நாசர், சி.வெ கணேசன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "எப்போதும் இல்லாத அளவிற்கு நகராட்சி நிர்வாகத் துறை சீரியப் பணிகளை செய்து வருகிறது, மற்ற மாநிலங்களை காட்டிலும் நகராட்சி நிர்வாக துறை தமிழ்நாட்டில் நல்ல முறையில் வளர்ந்துள்ளது. 48% இருந்த நகர்ப்புற மக்கள்தொகை 60% உயர்ந்துள்ளது.
நகரங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஓரளவு நிறைவு செய்துள்ளோம். நகர்ப்புறங்களில் மக்கள் தொகை பெருகி வருகிறது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை இந்தத் துறை செய்து முடித்து வருகிறது. முக்கியமான காலத்தில் நாம் இருந்து வருகிறோம். தொடங்கப்பட்டு நிலுவையில் உள்ள முடியாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
ஏன் பணிகளுக்கு காலதாமதம் ஆகிறது என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக கூற வேண்டும். பேருந்து நிலையங்கள், சந்தைகளில், கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், நிலுவையில் உள்ளவற்றை இங்கு தெரிவிக்க வேண்டும்.
ஓராண்டு , ஈராண்டாக நிலுவையில் உள்ள பணிகள் என்ன என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள் போல ஆரம்பிக்கப்பட்டு முடிவடையாமல் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் திட்டமிடல் வேண்டும்" என்று தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!