Tamilnadu

”அண்ணா அறிவாலயத்தை தொடக்கூட முடியாது” : அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

அண்ணா அறிவாலயத்தை அசைத்துப் பார்க்க வேண்டும் என நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாகப் போனதுதான் கடந்த கால வரலாறு என அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு ஆவேசத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "அண்ணா அறிவாலயத்தை அசைத்துப் பார்க்க வேண்டும் என நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாகப் போனதுதான் கடந்தகால வரலாறு. தி.மு.கவை அழிக்க வேண்டும் என்ற எப்போது புறப்படுகிறார்களோ அப்போதே அவர்களது அழிவுக்கான தொடக்கமும் தொடங்கிவிட்டது.

தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்து உணவர்வால் பின்னிப் பிணைந்தவர்கள் தி.மு.க தொண்டர்கள். அண்ணாமலையை போன்று இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல தி.மு.க தொண்டர்கள். தி.மு.கவின் ஆலயமாக இருக்கும் அண்ணா அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது. எப்படி அவரால் செங்கல்லை பிடுங்க முடியும்?.

75 ஆண்டு காலம் கடந்த தி.மு.க இயக்கத்தை அசைத்துப் பார்க்க இன்னொருவர் பிறந்து வரவேண்டும். அண்ணாமலையின் ஆணவ பேச்சுக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தேர்தலில் அண்ணாமலை எங்கு போட்டியிட்டாலும் தி.மு.கவின் தொண்டனை நிற்க வைத்து தோற்கடிப்போம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஒரு அண்ணனாக நான் என்றும் துணை நிற்பேன்” : துணை முதலமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி பேச்சு!