Tamilnadu
பனிமூட்டம் : கொடைக்கானலாக மாறிய சென்னை!
சென்னையில் கடந்த நில நாட்களாகவே அதிகாலையில் பனிமூட்டம் இருந்து வருகிறது.ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக கடும் பனிமூட்டம் நிலவியது. 10 அடி தூரத்திற்கே எதுவும் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது.
சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பனிமூட்டம் இருந்தது. திடீரென சென்னை கொடைக்கானல் போல் காட்சியளித்தது. இப்பனிமூட்டம் சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
மேலும், பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 6 விமானங்கள் சென்னையில் தரையிறந்த முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது. அதேபோல் ரயில் வேவைகளும் பாதிக்கப்பட்டது.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !