Tamilnadu
தொழிலாளர் நலத் துறையில் பதிவு செய்யப்பட்டது 'சாம்சங் இந்தியா' தொழிற்சங்கம் : சிஐடியு வரவேற்பு !
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலை நிறுவன ஊழியர்கள் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் ஊதிய உயர்வு, சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்துக்கு வந்த நிலையில், பேச்சுவார்தைக்காக அமைச்சர்களை நியமித்து இந்த விவகாரத்தில் சுமுகமான முறையில் தீர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள், நிர்வாகத்தினர் என அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுமுக முடிவு எட்டப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவர் என்று அறிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையும் ஒருபகுதியாக சாம்சங் பெயரில் தொழிற்சங்கம் தொடங்க சாம்சங் நிறுவனம் அனுமதி அளித்தது. அதன்படி 'சாம்சங் இந்தியா' தொழிற்சங்கத்தை பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்தது.
இந்த நிலையில், 'சாம்சங் இந்தியா' தொழிற்சங்கத்தை பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அறிவித்துள்ளது சாம்சங் தொழிற்சங்கத்திற்கு கிடைத்த மிகப் வரலாறு வெற்றி என சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் முத்துகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "சட்டத்தின் உரிமைகளை தொழிலாளர்கள் போராட்டத்தின் மூலமாக சாதிக்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டது. சாம்சங் தொழிற்சங்கம் மிகப் பெரிய போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வரலாற்று வெற்றி"என்று கூறியுள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!