அரசியல்

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பாஜக பரிந்துரைகள் மட்டுமே ஏற்பு : வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை !

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பாஜக அளித்த திருத்தங்கள் மட்டுமே ஏற்கபட்டால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பாஜக பரிந்துரைகள் மட்டுமே ஏற்பு : வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த மசோதா 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு இந்த மசோதா தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறது. இந்த கூட்டுக்குழுவில் 572 திருத்தங்கள் வழங்கப்பட்ட நிலையில், அதில் பா.ஜ.க வழங்கிய 22 திருத்தங்களுக்கு மட்டும் நாடாளுமன்ற கூட்டக்குழு ஏற்றுக்கொண்டதாக புகார் எழுந்தது.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பாஜக பரிந்துரைகள் மட்டுமே ஏற்பு : வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை !

இதனை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களான தி.மு.க MP ஆ.ராசா உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றக்கூட்டுக்குழுவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே நாளை (ஜன.29) நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் வக்ஃப் வாரிய திருத்தச்சட்டம் தொடர்பாக பாஜக அளித்த திருத்தங்கள் மட்டுமே ஏற்கபட்டால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தி.மு.க MP ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories