Tamilnadu
சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு... வெற்றி பெற்ற மாணவர்கள், துறைகளுக்கு முதலமைச்சர் பரிசு... விவரம்!
குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கும், அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற துறைகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.
சென்னை, காமராசர் சாலையில் நேற்று (26.1.2025) நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், டாக்டர் நாராயணசாமி நாயுடு வேளாண்மை விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் கோப்பைகள் ஆகிய பதக்கங்களையும், கோப்பைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளையும், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளையும், பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை பார்வையிட்டார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.1.2025) தலைமைச் செயலகத்தில், குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற
=> பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சியில் :
முதல் பரிசு பெற்ற கொளத்தூர், எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர்களுக்கும்,
* இரண்டாம் பரிசு பெற்ற மயிலாப்பூர், சிறுவர் தோட்டம் மேல்நிலைப் பள்ளி மாணவியர்களுக்கும்,
* மூன்றாம் பரிசு பெற்ற அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர்களுக்கும் கேடயங்களையும்;
=> கல்லூரி மாணவியர்களின் கலை நிகழ்ச்சியில் :
* முதல் பரிசு பெற்ற இராணி மேரி கல்லூரி மாணவியர்களுக்கும்,
* இரண்டாம் பரிசு பெற்ற கொளத்தூர், சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவியர்களுக்கும்,
மூன்றாம் பரிசு பெற்ற குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் கல்லூரி மாணவியர்களுக்கும் கேடயங்களையும் வழங்கி வாழ்த்தினார்.
=> தொடர்ந்து அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் :
முதல் பரிசு பெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., ஆகியோருக்கும்,
இரண்டாம் பரிசு பெற்ற காவல் துறையின் சார்பில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., காவல்துறை கூடுதல் ஆணையர் என். கண்ணன், இ.கா.ப., ஆகியோருக்கும்,
மூன்றாம் பரிசு பெற்ற இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., இணை ஆணையர் ச.இலட்சுமணன் ஆகியோருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!