Tamilnadu
1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள்... களை கட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - பரிசுகள் என்னென்ன?
ஆண்டுதோறும் பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,100 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும் சுமார் 2,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் வெளிநாடு சுற்றுலா பயணிகளும் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது. மேலும் இருசக்கர வாகனம், ஆட்டோ, சைக்கிள், தங்கக்காசு உள்ளிட்டவைகளும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!