Tamilnadu
பட்டாசு ஆலை வெடிவிபத்து - 6 பேர் பலி : முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிதியுதவி!
விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டடுள்ள அறிக்கை வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார், குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன், காமராஜ், வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய 6 நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
Also Read
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!