Tamilnadu
அனுமதி பெறாத Internet சேவை வழங்கும் நிறுவனங்கள், POLE-களுக்கு அபராதம் - சென்னை மாநகராட்சி திட்டம்!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 27 தனியார் நிறுவனங்களின் இணைய சேவை வழங்கும் கண்ணாடி இழை கேபிள்கள் (OFC) மற்றும் தொலைக்காட்சி சேவை வழங்கும் கேபிள்கள் சுமார் 5 ஆயிரம் கி.மீ. நீளத்துக்கு மேல் உரிய அனுமதி பெற்று பதிக்கப்பட்டும், கம்பங்கள் வழியாகவும் செல்கின்றன. கேபிள் வாடகை மூலமாக மாநகராட்சிக்கு ஆண்டு தோறும் சுமார் ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த நிறுவனங்களில் பல, பெற்ற அனுமதியை விட அதிகமான நீளத்துக்கு கேபிள்களை நிறுவி இருப்பதாகவும், மாநகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாமல் ரூ.30 கோடிக்கு மேல் நிலுவை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தது. கடந்த 2019-ம் ஆண்டே ரூ.74 கோடிக்கு மேல் நிலுவை தொகை வசூலிக்க வேண்டி இருந்தது. இந்நிறுவனங்கள் இதுநாள் வரை உயர்மட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி, வாடகையையும் செலுத்தாமல், நடவடிக்கையும் எடுக்கவிடாமல் பார்த்துக் கொண்டன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசு இ-சேவை மையங்கள் உள்ளிட்டவை இணைய சேவையை அடிப்படையாக கொண்டு செயல்படுவதால், வாடகை செலுத்தாத நிறுவனங்களின் கேபிள்களை மாநகராட்சி துண்டிக்கும் பட்சத்தில் நிறுவனங்களின் சேவைகள், மக்களுக்கான சேவைகள் அனைத்தும் பாதிக்கும் என வாடகை செலுத்தாத நிறுவனங்கள் கூறி வந்தன.
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் வாடகை நிலுவை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகமும் கடும் நடவடிக்கைகளை எடுக்காமல், வாடகைத் தொகையை செலுத்துமாறு கோரி வந்தது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம், தொடர்புடைய நிறுவனங்கள் அமைத்துள்ள கேபிள்களின் நீளம், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகை, மொத்தம் மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருவாய், இதுவரை செலுத்தப்பட்ட தொகை, எவ்வளவு நீளத்துக்கு கேபிள்களை நிறுவ அனுமதி பெற்றுள்ளன, எவ்வளவு நீளத்துக்கு அனுமதி பெறாமல் கேபிள்களை நிறுவியுள்ளன, நிலத்துக்கடியில் எத்தனை கிமீ நீளத்துக்கு கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி தெருவிளக்கு கம்பங்கள், தொடர்புடைய நிறுவனங்களின் கம்பங்கள் வழியாக எத்தனை கி.மீ நீளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அனுமதி பெறாத கேபிள்களுக்கு அனுமதி பெற்று, அதற்கான வாடகை, நிலுவை வாடகை ஆகியவற்றை காலத்தோடு செலுத்த வேண்டும் என்று தொடர்புடைய நிறுவனங்களிடம் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
குறிப்பாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும், கேபிள்களை பதிக்க உள்ளாட்சி நிர்வாகம், ரூ.56,100 வாடகையாக வசூலித்து வருகிறது. ஒவ்வொரு கம்பத்திற்கும், ரூ. 5,500 வாடகையாக கோரி இருந்த நிலையில், அதற்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. சென்னை மாநகரில் தொலைதொடர்பு நிறுவனங்கள் சார்பில், 1.50 லட்சத்திற்கும் அதிகமாக கம்பங்களை நட்டு உள்ளன. 2020ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், குறைந்தது 1,500 கிலோ மீட்டர் தொலைவிலான பகுதிக்கு, அந்நிறுவனங்கள், எவ்வித அனுமதியும் பெறாமல், கேபிள்களை பதித்து உள்ளது தெரிய வந்துள்ளது.
ஆகையால் சென்னை மாநகராட்சியில் அனுமதி இல்லாமல் இண்டர்நெட் நிறுவனங்கள் ஒழுங்கற்ற முறையிலும், அனுமதி பெறாமலும் நிறுவப்பட்டுள்ள POLE கம்பங்களுக்கு அபராத தொகை வசூலிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. விரைவில் இது தொடர்பாக ஆய்வு செய்து அபராத தொகை எந்த அளவுக்கு நிர்ணயம் செய்வது என முடிவு செய்ய உள்ளனர். இம்மாத்ததில் கூடவுள்ள மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!