Tamilnadu
முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி & பபாசி விருதுகள் அறிவிப்பு : யார் யாருக்கு? பட்டியல் வெளியீடு !
ஆண்டுதோறும் புத்தக பிரியர்களுக்காகவே சென்னையில் புத்தகக் கட்சி நடைபெறும். இந்த புத்தகக் காட்சியில் மாநிலம் முழுவதும் இருந்து பலரும் வருகை தந்து புத்தகத்தை வாங்கி செல்வர். அந்த வகையில் 48-வது சென்னை புத்தகக் காட்சி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் டிச.27-ம் தேதி முதல் ஜன.12-ம் தேதி வரை சென்னை புத்தகக் காட்சி நடைபெறுகிறது.
இந்த புத்தகக் காட்சியானது, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் டிச.27-ம் தேதி மாலை 4.30 மணி அளவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் தொடங்கி வைக்கவுள்ளனர். இத்துவக்க நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்கள்.
மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் புத்தகக் காட்சியானது, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10% கழிவு வழங்கப்படுகிறது. அதோடு மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. பள்ளி கல்லூரி நூலகங்களுக்கு கூடுதல் கழிவு வழங்கப்படும்.
=> ஓவியப்போட்டி :
* 1 முதல் 5-ம் வகுப்பு – இயற்கைக்காட்சி,
* 6 முதல் 8-ம் வகுப்பு – புத்தகக்காட்சி,
* 9 மற்றும் 10-ம் வகுப்பு - தமிழகத்தின் சுற்றுலா தலங்கள்,
* 11 மற்றும் 12 ஆம் வகுப்பு - சுதந்திர போராட்ட தியாகிகள்.
- போட்டிகள் ஜனவரி 7 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணிக்கு புத்தகக்காட்சி வளாகத்தில் நடைபெறும்.
=> பேச்சுப்போட்டி :
* 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எனக்கு பிடித்த தேசத்தலைவர்கள் என்ற தலைப்பிலும்,
* 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு என் நாடு என் மொழி என் மக்கள் என்ற தலைப்பிலும்,
* 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் வாழ்க்கைக்கு வழி காட்டும் திருக்குறள் என்ற தலைப்பிலும்,
- வரும் ஜனவரி 8 ஆம் தேதி புதன் கிழமை அன்று காலை 8 மணிக்கு புத்தகக்காட்சி வளாகத்தில் நடைபெறும்.
பத்து இலட்சம் விலையில்லா அனுமதிச் சீட்டுக்கள் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, நேஷனல் புக்டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை, ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கிறார்கள்.இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது. நிறைவுநாள் நிகழ்வில் நீதியரசர் ஆர். மகாதேவன் (உச்சநீதிமன்றம்) பங்கேற்கிறார்கள்.
=> முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் படைப்பாளுமைகள்:
* பேராசிரியர் அருணன் – உரைநடை
* நெல்லை ஜெயந்தா – கவிதை
* சுரேஷ் குமார் இந்திரஜித் – நாவல்
* என். ஸ்ரீராம் – சிறுகதைகள்
* கலைராணி – நாடகம்
* நிர்மால்யா – மொழிபெயர்ப்பு
=> பபாசி விருது பெறுவோர் :
* சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணாதி விருது - கற்பகம் புத்தகாலயம்
* சிறந்த நூலகருக்கான விருது - Dr. R.கோதண்டராமன்
* சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது - பெல் கோ
* சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருது - எழுத்தாளர் ஜோதி சுந்தரேசன்
* சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது - முனைவர் சபா.அருணாச்சலம்
* சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது - பேராசிரியர் பர்வீன் சுல்தானா
* சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது - எழுத்தாளர் சங்கர சரவணன்
* முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தார் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது - மணவை பொன்.மாணிக்கம்
* சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருது - மரபின் மைந்தன் முத்தையா
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!