Tamilnadu

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்! : சிரமமின்றி பொதுமக்கள் பயணம்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருவண்ணாமலையிலும் வழக்கத்திற்கு மாறான வகையில் அதிகனமழை பெய்தது. இதன் விளைவாக மண்சரிவு ஏற்பட்டு, கார்த்திகை தீப விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு டிச.12 முதல்15-ம் தேதி வரை 4 நாள்களுக்கு 10,109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அவ்வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு டிச.12 முதல் டிச.15 வரை 1,982 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோயம்பேட்டிலிருந்து 30- க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம் - வந்தவாசி வழியாகவும், மற்றும் கோயம்பேட்டில் இருந்து ஆற்காடு ஆரணி வழியாக இருவேறு பாதைகளில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது,

இதனால் பொதுமக்கள் சிரமம் இன்றி பயணித்து வருகின்றனர். பொதுமக்கள் வசதிக்காக குடிநீர், கழிப்பறை வசதிகளுக்கும் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Also Read: திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து... முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிதியுதவி!