Tamilnadu
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் அனுமதி இல்லை: அமைச்சர் சேகர் பாபு தகவல்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அருள்மிகு பெரியாண்டவருக்கு 12 கிலோ எடையில் உபயதாரர் நிதியில் இருந்து உருவாக்கப்பட்ட வெள்ளிக் கவசத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு 12 கிலோ எடையிலான வெள்ளி கவசத்தை தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்பு பகுதியில் உள்ள அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவிலுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நன்கொடையாளர்களின் பங்களிப்பு பெருமளவு திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் வழங்கப்படும் நிதிகள் அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப திருக்கோவில்களுக்கு திருப்பணிக்கும் பயன்படுவதால் அதிக அளவு நன்கொடையாளர்கள் திருக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பிறகுதான் அதிகளவில் கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. இதுவரை 2,350 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
இன்னும் சில நாட்களில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடம் ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு நன்கொடையாளர்களால் வழங்கப்பட உள்ளது. இதுவரை 10,000 மேற்பட்ட கோயில்கள் திருப்பணிக்காக மாநில வல்லுநர் குழுவால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
33 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர் கோவிலுக்கு 100 கிலோ வெள்ளியை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இந்து சமய அறநிலைத்துறையில் நடைபெற்ற சாதனைப் போல் வேறு எந்த ஆட்சி காலத்திலும் நடைபெறவில்லை.
எட்டுக்கால் பாய்ச்சலில் அறநிலையத்துறை செயல்படுவதால் இறை பக்தர்கள் ஆட்சியை பாராட்டுகிறார்கள். இதுவரை 909 கோடி ரூபாய் நன்கொடையாளர்கள் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
வருகிற திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு காலையில் ஏற்றப்படும் பரணி தீபத்த்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள், உபயதாரர்கள், துறை பணியாளர்கள் உள்பட 6,600 நபர்களை அனுமதிக்கப்பட உள்ளனர்.
மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு கோயிலை சுற்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள், உபயதாரர்கள், துறை பணியாளர்கள் உள்பட 11,600 நபர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். திருவண்ணாமலை மலையில் அதிக அளவில் மக்களை ஏற்றக்கூடாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தீபத்திற்கு பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிடுவார். அறிக்கையின்படி மலையில் தீபம் ஏற்ற தேவையான அளவு மனிதர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என தெரிவித்தார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!