Tamilnadu
ரூ.400 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலை அமைக்கும் டாபர் நிறுவனம் : 750 பேருக்கு வேலை வாய்ப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் 2030க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், திண்டிவனம் சிப்காட் உணவுப்பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை டாபர் நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாபர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இதன்படி, 1.36 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது. இதில் தேன், ஓடோனில், டாபர் ரெட் டூத் பேஸ்ட், ரோஸ் வாட்டர், அம்லா ஹெர் ஆயில் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !