Tamilnadu
“அரசு மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவ உபகரணங்கள்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி பேச்சு!
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் கலையரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குநரகம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1200 செவிலியர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்து அதற்கான ஆணை வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய 963 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்து ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 1200 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 963 ஒப்பந்த பணியாளர்கள் என 2,163 பேருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்படுகிறது. இதற்கு முன் நேர்மையான கலந்தாய்வு நடத்தி வெளிப்படைத் தன்மையான கலந்தாய்வு மூலம் 1200 செவிலியர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கி உள்ளோம். ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு ஒரே இடத்தில் பணியானை வழங்குவது இதுவே முதல் முறை.
இந்தியாவில் முதல் முறையாக பணி ஆணை பெறும் போதே யார் யாருக்கு எந்த இடத்தில் பணியாற்ற விருப்பமோ அங்கே வழங்குவதும் இதுவே முதல் முறை. அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பணி ஆணை வழங்கி வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
9535 பேர் செவிலியர்கள், 14,783 மருத்துவ பணியாளர்கள் என இதுவரை இந்த அரசு பொறுப்பேற்ற பின் 36,893 பேர் கலந்தாய்வு மூலம் வெளிப்படைத்தன்மையுடன் பணி மாறுதல்கள் பெற்றுள்ளனர். இன்னும் பல காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டி உள்ளது. 2,553 மருத்துவர் பணியிடங்களுக்கு 23,000 மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இந்த தேர்வு ஜனவரி 5 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும்.
ஏழை எளிய மக்கள் தான் அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். அவர்களை கனிவோடு அணுகுங்கள். ஏற்கனவே அப்படி தான் இருக்கிறீர்கள். அதில் ஒரு சிலர் குடும்ப பிரச்சினைகள் காரணமாக சிறிது கடிந்து கொண்டாலும் அது பிரச்சினை ஆகிறது. இப்போது ஊடகங்கள் பெரிய அளவில் வளர்ந்து விட்டது, செல்போனில் மட்டும் தான் வீடியோ எடுக்கிறார்கள் என்று இல்லை. எங்கோ எப்போதோ நடந்த சில எதார்த்த நிகழ்வுகளை தவறாக சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். இந்தியாவில் உள்ள அதி சிறந்த மருத்துவமனைகளில் உள்ள உபகரணங்களை காட்டிலும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவ உபகரணங்கள் உள்ளன. நோயாளிகள் அரசு மருத்துவ சேவையை நம்ப தொடங்கி இருக்கிறார்கள்" என்று கூறினார்.
Also Read
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!