Tamilnadu

ரயில் பயணிகள் கவனத்திற்கு... ரயில்களின் நேரம் மற்றும் ரயில் நிலையம் மாற்றம்!

சென்னை அருகே ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருற்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் நிலையமும் மாற்றப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

1.சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும்.

2.சென்னை - ஏற்காடு விரைவு ரயில் கடற்கரையில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும்.

3.சென்னை - கொல்லம் சிறப்பு விரைவு ரயில் நள்ளிரவு 12.30 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும்.

4.சென்னை - மும்மை லோக்மான்ய சிலக் விரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.20 மணிக்கு புறப்படும்.

5.சென்னை - கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் மாலை 4 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்படும்.

Also Read: ”நாளை 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்”.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!