Tamilnadu
”தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்” : நாடாளுமன்றத்தில் வில்சன் MP வலியுறுத்தல்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என மாநிலங்களவையில் வில்சன் MP வலியுறுத்தியுள்ளார்
மாநிலங்களவையில் பேசிய தி.மு.க எம்.பி வில்சன், "சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைப்பதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாநில அரசை நிர்பந்திக்கூடாது மற்றும் தமிழ்நாடு அனுப்பியிருக்கும் தேசிய கல்விக் கொள்கையை கடைப்பிடிப்பதை கட்டாயப்படுத்தும் விதியை விலக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் .
மேலும் இந்திய தேசிய கல்விக் கொள்கை 2035ஆம் ஆண்டுக்குள் மொத்த சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக அடைவதை இலக்காக கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு இவ்விலக்கை ஏற்கனவே அடைந்துவிட்டதன் காரணமாக மாநில அரசுகள் தனது சொந்த கல்விக் கொள்கையை உருவாக்க ஒன்றிய அரசு அதிகாரம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அதேபோல், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் சமூக பன்முகத்தன்மை/இட ஒதுக்கீடுகள் தேவை என்பதை தனது முன்மொழியப்பட்ட நடைமுறை குறிப்பில் அரசு சேர்த்திருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், அனைத்து உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முன்னேறிய வகுப்பினர், பெண்கள் மற்றும் சிறுபான்மை பிரிவு நீதிபதிகளின் 31.10.2024 அன்றுவரையிலான எண்ணிக்கை விவரங்களை வெளியிடவேண்டும்.
17.01.2023 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த போதிலும் ராமசாமி நீலகண்டன் மற்றும் ஜான் சத்தியம் ஆகியோரின் பெயர்கள் நிலுவையில் உள்ளதன் காரணங்களை வெளியிட வேண்டும்.
31.10.2024 காலம்வரையில் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் உள்ள மொத்த காலியிடங்களின் விவரங்கள் மற்றும் பணியிலிருக்கும் நீதிபதிகளின் எண்ணிகையையும் அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!