Tamilnadu
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் துணை முதலமைச்சர் மரியாதை!
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று (நவம்பர் 27) பிறந்தநாள் கண்டிருக்கிறார்.
“இந்நாளை கொள்கை நாளாக கொண்டாட வேண்டும்” என்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முழுக்க கழக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கொள்கைகளை பரப்பியும் வருகின்றனர்.
அவ்வகையில், பிறந்தநாள் தொடக்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலாக சென்னை முகாம் அலுவலகத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.
அதன் தொடர்ச்சியாக திராவிட இயக்கத்தின் தூண்களாகவும், சமூக நீதி பாதைக்கு வித்திட்டவர்களாகவும் இருந்து, தங்களது வாழ்நாளை பொதுவாழ்விற்காக அர்ப்பணித்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று, நேரில் மரியாதை செலுத்தினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மரியாதை செலுத்திய பிறகு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Also Read
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!