Tamilnadu
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர், “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ், 69 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட சென்னை நடுநிலைப் பள்ளியின் மழலையர் பிரிவுக் கட்டடத்தை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து தி.மு.க. எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!