Tamilnadu
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஏரியை ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு, மாநகரப் பகுதியில் ஆக்கிரமிப்பில், பராமரிப்பின்றி இருந்த ஏரிகள், குளங்கள் மீட்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காக்களாக மாற்றப்பட்டு வருகிறது.
அவ்வாறு 100-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மணலி மண்டலம், 16-வது வார்டில் இடம்பெற்றுள்ள 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
அதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. தற்போது ஏரியில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. சுமார் 3 மீட்டர் ஆழத்துக்கு தூர் வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஏரியின் நீர் கொள்திறன் இரட்டிப்பாகும். அதாவது 1.9 மில்லியன் கன மீட்டராக கொள்திறன் உயர்த்தப்படும்.
மேலும் இப்பூங்காவில் பொதுமக்களை கவரும் வகையில் நடைபாதை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, இரு பறவைகள் தீவுகள், செயற்கை நீரூற்று, பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க சாய்வு இருக்கை வசதி மற்றும் நடைபாதை வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!