Tamilnadu
நீலகிரி : ஆர்க்கிட் மலர்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு : அந்த மலர்களின் முக்கியத்துவம் என்ன ?
மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள நீலகிரி மலைத்தொடரில் ஏராளமான மலர் வகைகள் உள்ளன. இங்கு உள்ள உயிர் சூழல் மண்டலத்தில் 250 வகையான ஆர்க்கிட் மலர் வகைகள் உள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அழிவின் பிடியில் உள்ளது என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆர்க்கிட் தாவரங்களை பாதுகாக்க மூன்று கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிடடிருந்தார். இதனைத் தொடர்ந்து கூடலூர் வனக்கோட்டத்துக்குட்பட்ட நாடு காணி தாவரவியல் மையத்தில் அறிய வகை தாவரங்களான ஆர்க்கிட் தாவரங்களை பாதுகாக்க ஆர்கிட் குடில்கள், பெரணி இல்லங்கள் அமைக்கப்பட்டன.
இங்கு பொதுமக்கள், பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இந்த தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அழிவின் பட்டியலில் உள்ள ஆர்கிட் தாவரங்களை பாதுகாக்க அதன் உற்பத்தியை அதிகரிக்க முதல் கட்டமாக 75 லட்சம் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ஆர்க்கிட் தாவர வகைகளைச் சேகரித்து, சிறப்பு கண்ணாடி மாளிகையில் வைத்து பராமரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விரைவில் ஆர்க்கிட் மலர்களைக் கொண்ட கண்ணாடி மாளிகை ஊட்டி தாவரவியல் பூங்காவில் அமைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!
-
ஜி.டி.நாயுடு பாலம் : மோடிக்கு நன்றியா? - போலி பிரசாரம் செய்யும் பாஜக... அம்பலப்படுத்திய TN Fact Check!
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!