Tamilnadu
”சிறு வணிகர்களின் வாழ்வை முடக்கும் மோடி அரசு” : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
சிறு வணிகர்களின் வாழ்வை முடக்க கடை வாடகைக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு பொறுப்பேற்றதிலிருந்தே பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவதையும், சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை அமலாக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23ல் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிக மோசடியானது மட்டுமின்றி, வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதலாகும். ஏற்கனவே கடுமையாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு வணிகர்களை மேலும் மோசமான நிலைக்கு தள்ளிவிடுகிற ஆபத்தை கொண்டதாகும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளது சிறு வணிகர்களை முற்றாக சீரழித்து, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூர தாக்குதலாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!
-
திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
-
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!