Tamilnadu
அவதூறு பேச்சு - கஸ்தூரியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
சென்னையில் பார்ப்பனர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கு பெற்று, தெலுங்கு சமுதாயத்தினரையும், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களையும் குறித்து இழிவான முறையில் பேசினார்.
மேலும், தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையிலும் கலந்துகொண்டு அவதூறு பரப்பும் வகையில் பேசினார். இந்நிலையில், கஸ்தூரியின் பேச்சிற்கு தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தது.
அதோடு,தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் புகார் அளித்ததன் அடிப்படையில், 4 பிரிவுகளில் எழும்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
மேலும்,தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், மதுரை திருநகர் காவல்நிலையத்தில் கஸ்தூரி மீதும், நம் தேசம் பாரத் என்கிற யூடியூப் பக்கம் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்குகளில் முன்ஜாமின் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ”ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை தவறாக குறிப்பிட்டு ஏன் கூறினார்?. அதற்கான அவசியம் என்ன?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், தன்னை கற்றவர்,சமூக ஆர்வலர்,அரசியல் வாதி என தன்னை கூறும் அவர் எப்படி இப்படி கருத்தை தெரிவிக்கலாம்?. தான் கூறியதை நியாயப்படுத்த விரும்புவதாகவே அவரின் விளக்கம் இருந்தது என கூறி நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கஸ்தூரிக்கு முன் ஜாமின் வழங்க முடியாது என தீர்ப்பு வழங்கி ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
Also Read
-
“‘முடிந்துவிட்டது’ என்றுதான் சொன்னேன், அது இன்றைக்கு பெரிய வைரலாகிவிட்டது!” : முதலமைச்சர் மு.க்.ஸ்டாலின்!
-
ரூ.6 கோடி மதிப்பீட்டில் ‘மதுரை ஒலிம்பிக் அகாடமி’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்குத் தமிழ்த்தாய் வாழ்த்தை உறுதி செய்த கரந்தை தமிழ்ச் சங்கம்!” : துணை முதல்வர் உதயநிதி உரை!
-
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
-
திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!