Tamilnadu
மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம் : “மருத்துவர்களின் பணி பாதுகாப்பை நம் கடமை” - முதலமைச்சர் கண்டனம் !
சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பாலாஜி என்ற மருத்துவர் பணிபுரிந்து வருகிறார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் உறவினர் கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மருத்துவரை கத்தியால் குத்திய நபர் உள்ளிட்ட இருவரை போலிசார் கைது செய்தனர். இந்த நிலையில், மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
சாலை விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் உயிரிழப்பு... முதலமைச்சர் இரங்கல் & நிதியுதவி!
-
மதுரையில் மதி கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
நெல் அறுவடை குறித்து எதுவும் தெரியாமல் கருத்து சொல்கிறார்கள்... பழனிசாமி, அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர்!
-
காலமானார் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !
-
கோவை, ஈரோடு மாவட்டத்தில் கள ஆய்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரங்கள் இதோ!