Tamilnadu
கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி! : துணைத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு!
ஜனவரி 2025-இல் திருச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் துணைத் தலைவராக அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று (நவம்பர் 10) பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், துணைத்தலைவருக்கான Scarf அணிவித்து சிறப்பித்தார்.
தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் தலைமையில் பெருந்திரளணி தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருந்திரளனி பொறுப்பாளர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோரும் உயர் காவல் அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.
Also Read
-
ஜனவரிக்குள் 1 கிலோ அரிசி விலை ரூ.120-ஆக உயரும் அபாயம்! - த.வெ.க.வின் தோல்வியால் தவிக்கும் மக்கள்!
-
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
-
“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!