Tamilnadu
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, குரூப்-4ல் தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியல்! : TNPSC வெளியிட்டது!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் நான்கு தேர்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.
கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சர், அமைச்சுப் பணிகள் உள்ளிட்ட காலியாகவுள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் 9ஆம் நாள் தோ்வு நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மூன்று மாதங்களில் (அக்டோபர் 28) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
அந்த வகையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதனை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!