Tamilnadu
”பா.ஜ.கவில் ஆதாயம் கிடைக்கும் ஆசையில் பேசும் கஸ்தூரி” : நடிகர் எஸ்.வி சேகர் கண்டனம்!
சென்னையில் பிராமணர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு சமுதாயம் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? என கஸ்தூரிக்கு தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்ததை அடுத்து தனது கருத்துக்கு கஸ்தூரி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பாக நடிகை கஸ்தூரி மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த புகார் மீது 4 பிரிவுகளில் எழும்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கஸ்தூரி பேசியது கண்டிக்கத்தக்கது என நடிகர் நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார். இது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. யாராக இருந்தாலும் சரி மற்ற சமூகத்தை தரக்குறைவாக பேசுவது தவறானது. அண்ணாமலை மூலம் பா.ஜ.கவில் ஆதாயம் கிடைக்கும் ஆசையில் இப்படி அவர் பேசி வருகிறார்.
முட்டைகோஸ் நாற்றத்தை விடவா அசைவ உணவின் நாற்றம் இருக்கப்போகிறது போகிறது. உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் சாப்பிடாதீர்கள். யாருடைய விருப்பத்திலும் யாரும் தலையிடக் கூடாது. வேற்றுமையை பெரிதாக்கி வெறுப்பை வளர்த்தால் வாழ்வு சுமூகமாக இருக்காது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!