Tamilnadu
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி தொடரும். தி.மு.க தலைமையிலான கொள்கை கூட்டணியை விட்டுவிட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவை எங்களுக்கு இல்லை என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், ”நாங்கள் தொடர்ந்து தி.மு.க கூட்டணியில் தான் இருந்து வருகிறோம். தி.மு.க தலைமையிலான கொள்கை கூட்டணியை விட்டுவிட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவை எங்களுக்கு இல்லை. ஏற்கனவே அதை நான் பலமுறை சுட்டிக்காட்டி உள்ளேன். வேண்டுமென்று சிலர் பரப்பும் பொய் செய்திகளை நான் முற்றிலுமாக மறுத்து வருகிறேன். 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.
திராவிடத்தால் யாரும் வீழவில்லை திராவிடத்தால் வாழ்ந்தோம் வரலாறு படைத்தோம் என்பதே உண்மை. சாதியம் தான் நம்மளை பிளவுபடுத்தி, வீழ்த்தியுள்ளது. சாதியத்தை எதிர்க்க வேண்டும் என்றால் ஆரியத்தை எதிர்க்க வேண்டும்.
திராவிடம் என்பது சாதிய கருத்துகளுக்கு எதிராக பேசும் அரசியல். திராவிடம் கருத்தியல் இல்லை என்றால் சனாதனம் நம்மளை விழுங்கி இருக்கும். ஹிந்தி தமிழை விழுங்கி இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!