Tamilnadu
ஒரே நேரத்தில் இரு கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள்! : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
திராவிட மாடல் ஆட்சிக்கு பின், முதலமைச்சர் கோப்பை, சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்துதல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளால், விளையாட்டுத்துறையின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது.
அதன் ஒரு பங்காகவே, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட்மாஸ்டர்கள் கலந்துகொள்ளும் 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நவம்பர் 5 முதல் 11 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்படுகிறது.
இப்போட்டியின் மொத்த பரிசு தொகையான ரூ 50 லட்சத்தை தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது. இப்போட்டி 7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் (Round Robin) முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு சென்னையில் நடந்த கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் டி.குகேஷ் வெற்றி பெற்றதன் மூலம் அ கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற உதவியது. உலக சாம்பியனாவதை நோக்கமாக கொண்ட அவரது பயணத்தில் ஒரு முக்கிய மடியாக அவ்வெற்றி அமைந்தது.
மேலும் வரும் நவம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் விரனை எதிர்த்து ருகேஷ் விளையாட உள்ளார். இவ்வாண்டு, சென்னை கிராண்ட்மாஸ்டர் சேலஞ்சர்ஸ் போட்டியும், மாஸ்டர்ஸ் போட்டியும் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.
இப்போட்டியில் 8 இந்திய மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி, வி. பிரணவ் எம். பிரனேஷ் மற்றும் ஆர் வைஷாலி கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு ரவுண்ட் ராபின் முறையில் 7 சுற்றுகள் கொண்ட கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடுவார்கள்.
இப்போட்டியின் பரிசுத்தொகை மொத்தம் ரூ.20 லட்சம் ஆகும். இப்போட்டியில் வெற்றி பெறுபவர் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவார்.
Also Read
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?
-
பொருநையை தொடர்ந்து தஞ்சையில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் : டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
-
“நயினார் நாகேந்திரனின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
பிராட்வேயில் ரூ.23 கோடியில் “முதல்வர் படைப்பகம் & நவீன நூலகம்”... அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்!