Tamilnadu
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
தமிழ்நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகளை வாங்க மக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகிறார்கள்.
மேலும் வெளிமாவட்டங்களில் வேலைவார்க்கும் பொதுமக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் எவ்வித சிரமமும் இன்றி செல்லும வகையில் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் வாரச் சந்தையில் 2 மணி நேரத்தில் 44 ஆடுகள் விற்கனை செய்யப்பட்டுள்ளது.இந்த சந்தைக்கு தியாகதுருவம். திருக்கோவிலூர். ஆசனூர். மடப்பட்டு. சேந்தநாடு. குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது காலை ஐந்து மணிக்கு தொடங்கி இந்த சந்தையில் சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த
வியாபாரிகள் வழக்கத்தைவிட ஆடுகளை வாங்கி குவித்தனர். வெள்ளாடு செம்மறி ஆடு குறும்பாடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ. 8000 முதல் ரூ. 25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது. வழக்கமாக இந்த வாரம் சந்தையில் ரூ.50 லட்சம் ஆடுகள் விற்பனை நடைபெற்ற நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சந்தை தொடங்கி இரண்டு மணி நேரத்தில் 3 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Also Read
-
“நீலப்பொருளாதாரத்தில் முன்னணி மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மாநிலங்களவை தேர்தல் : வெளியானது தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல்!
-
காங்கிரஸ் கட்சிக்கு 28+1 ; கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!
-
ரூ.42.94 கோடியில் 14 விளையாட்டுத்துறை கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!