Tamilnadu
சென்னையின் 4 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்கப்படாது : தெற்கு ரயில்வே அறிவிப்பு !
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கானோர் தாங்கள் வசிக்கும் இடத்தில இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இப்படி சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 1-ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
மேலும் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. அந்த வகையில் ரயில்வே துறையும் பயணிகள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளிக்காக ஊருக்கு செல்லும் பயணிகளுடன் வருவோரினால் ரயில்வே நிலைய நடைபாதைகளில் நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னையின் 4 ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் நடைமேடை டிக்கெட் விற்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பயன்படுத்தும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்கப்படாது கூறப்பட்டுள்ளது. அதே நேரம் மூத்த குடிமக்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு இது பொருந்தாது என்றும் கூறியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!