Tamilnadu
300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! : சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
தீப ஒளி திருநாளை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும். வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் எதிர்வரும் 28.10.2024 முதல் 30.10.2024 வரையிலான 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
2. கோயம்பேடு பேருந்து நிலையம்
3. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து நிலையங்கள்/பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.
எனினும், எதிர்வரும் தீப ஒளி திருநாளை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் கூடுதலாக 300 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 28.10.2024 முதல் 30.10.2024 ஆகிய 3 நாட்களில் இயக்கபட உள்ளது.
மேலும், தீப ஒளி திருநாளை முடித்து ஊர் திரும்பும் பொது மக்களின் நலனுக்காக 02.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 03.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் மாலை மற்றும் இரவுப்பணி (PM & Night Shift) 100 பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!