Tamilnadu
சென்னை பட்டினப்பாக்கம் நவீன மீன் அங்காடி : விரைவில் செயல்படத் தொடங்கும்!
சென்னை பட்டினப்பாக்கம் மெரினா லூப் சாலையில் 9.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை கடந்த ஆகஸ்ட் 12ம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
366 கடைகள் கொண்ட மீன் அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு செய்வதற்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக மீன் அங்காடி செயல்படுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது கடைகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமான சாகசம் நிறைவடைந்த பின் திங்கள் முதல் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியில் கடைகள் மாற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ள தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லூப் சாலையோரங்களில் மீன் கடை மற்று. ஆக்கிரமிப்புகளுக்கு அனுமதியில்லை என்றும், மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்... விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு என்ன ?
-
பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
‘சமூகநீதி விடுதிகள்’ : முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் வரவேற்பு!
-
சமூகநீதி விடுதிகள் : "முதலமைச்சரின் சிறந்த சமூக நீதி சமத்துவ சிந்தனை இது" - கே.பாலகிருஷ்ணன் பாராட்டு !
-
4 மணி நேரம் - 10 துறைகள் குறித்து ஆய்வு : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியது என்ன?