Tamilnadu
மக்களுக்கான தூய்மை பணியாளர்கள் : தவற விட்ட ரூ.25 ஆயிரம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு!
சென்னை, திருவல்லிக்கேணி பார்த் தசாரதி கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வருபவர் அஸ்வினி. இவர் நேற்று பூ விற்பனை செய்த, ரூ.25000ம் பணப் பையை தவற விட்டுள்ளார். பல இடங்களில் தேடியும் பணப்பை கிடைக்கவில்லை.
பின்னர் அப்பகுதியில் துாய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த, நீலாவதி மற்றும தேவி ஆகிய இருவருக்கும் தகவல் கிடைத்துள்ளது. பிறகு இவர்கள் தெருக்களில் சேகரித்த குப்பை கொட்டும் தொட்டியில் தேடிபார்த்துள்ளனர்.
அப்போது, சிறிய பை ஒன்று இருந்துள்ளது. அதை திறந்து பார்த்ததபோது அதில் பணம் இருந்தது. பிறகு ரூ.25 ஆயிரம் பணத்தை அதன் உரிமையாளர் அஸ்வினியிடம் ஒப்படைத்தனர்.
தவறவிட்ட பணத்தை தேடி மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு உரிமையாளர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு அப்பகுதி மக்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
தொட்டியை கவிழ்த்து சோதனை செய்ததில், பணம் இருந்த பை கிடைத்தது.அந்த பணத்தை, பூ வியாபாரியிடம் அதிகாரிகள் முன்னிலையில், அவர்கள் ஒப்படைத்தனர். பூ வியாபாரி தவறவிட்ட, 25,000 ரூபாயை மீட்டு கொடுத்த துாய்மை பணியாளர்கள் நீலாவதி, தேவி ஆகியோருக்கு பூ வியாபாரி நன்றி தெரிவித்தார்.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!