Tamilnadu
சென்னை விமான சாகசக்கண்காட்சி : முதற்கட்ட ஒத்திகையில் விமானப்படை : விமான சேவை தற்காலிக நிறுத்தம் !
1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவின் முதல் விமானப்படை நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் இவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படையின் நிறுவன தினமாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய விமானப்படையின் நிறுவன தினக் கொண்டாட்டங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தும் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு, 92 ஆவது ஆண்டு விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் விமான கண்காட்சி, அக்டோபர் 8 ஆம் தேதியில் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினத்த்ல் இந்திய விமானப்படையின் வகைவகையான 72 விமானங்கள் காண்போரை கவர்ந்திழுக்கும் ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானக் கண்காட்சியில், வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கைடைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை தங்களது பங்கேற்கவுள்ளது
மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய பெருமைவாய்ந்த பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்துவகை விமானங்களும் விதவிதமான அணிவகுப்பில் ஈடுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 6, 2024 அன்று, மெரினா கடற்கரையில் நிகழும் இந்த விமான சாகசக்கண்காட்சியை அனைவரும் இலவசமாக பார்வையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விமான சாகசக்கண்காட்சியின் முதற்கட்ட ஒத்திகை இன்று மெரினா கடற்கரையில் நடத்தப்பட்டது.
இதனை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் விமான சேவை இரண்டு மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் விமான சாகசக்கண்காட்சி நடக்கும் நாள் வரை சென்னை விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும், பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களிடம் விமானம் கிளம்பும் நேரம் குறித்து அறிந்துகொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !