Tamilnadu
”மினி டைடல் பூங்காக்கள் மூலம் சொந்த ஊர்களிலேயே இளைஞர்களுக்கு வேலை” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!
தஞ்சாவூரில் ரூ.30.50 கோடியிலும், சேலத்தில் தலா ரூ.29.50 கோடியிலும் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இனைத் தொடர்ந்து, மினி TIDEL பூங்காக்கள் மூலம் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சொந்த ஊர்களிலேயே தொடர முடியும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,"திராவிட_நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல அரசின் பரவலாகப்பட்ட வளர்ச்சி என்ற நோக்கத்திற்கு இன்று மற்றுமொரு பொன் நாள். குறிப்பாக தஞ்சாவூர் மற்றும் சேலம் மக்களுக்கு அற்புதமான நாள்.
தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் மினி டைடல் பூங்காக்களைத் தொடங்கி உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை இந்த நகரங்களுக்குக் கொண்டுவந்திருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திராவிட நாயகன் அவர்கள்.
தஞ்சாவூர் தற்போது தனது முதல் முக்கிய தகவல் தொழில்நுட்ப வசதியைப் பெற்றுள்ளதற்கு டெல்டா பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மிகவும் பெருமையடைகிறேன்.
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, இத்திட்டத்தை 15 மாதங்களிலேயே நிறைவு செய்துள்ளது. டைடல் பார்க் களின் தேவை மிகுந்திருப்பதால், நம் மதிப்புக்குரிய முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று, விரைவில் இரண்டாம் கட்டப் பணிகளை தொடங்கும் வாய்ப்புள்ளது.
சேலம் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுக்கு அதிக தகவல் தொழில்நுட்பத் தொழில் உள்கட்டமைப்பைக் கொண்டுவர வேண்டும் என்ற நம் முதலமைச்சரின் கனவு, இப்போது Salem TidelNeo மூலம் நனவாகியுள்ளது. மேலும், விரைவில் வரவிருக்கும் டெக்ஸ் பார்க் சேலம் நெசவுத் துறையில் பெரிய அளவில் ஊக்கமளிக்கும்.
இந்த மினி TIDEL பூங்காக்கள், புதிய பகுதிகளிலும் 2 மற்றும் 3ஆம் கட்ட நகரங்களிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சான்றாகும், இதனால் நம் மாநிலத்தின் திறமை மிக்க இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சொந்த ஊர்களிலயே தொடர முடியும்.
இன்னும் பல MiniTIDEL பார்க்குகள் தொடங்கப்படுவதற்கான வரிசையில் உள்ள நிலையில், நம் மாண்புமிகு முதலமைச்சரின் Trillion Dollar TN என்ற இலக்கை அடைவதற்கான விரைவுப் பாதையில் நாம் விரைந்து முன்னேறிக் கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்