Tamilnadu
விமானப்படை நிறுவன தினம் : அக்.7-ல் சென்னை மெரினா வான்வெளியில் அணிவகுக்கும் ரஃபேல், தேஜஸ் விமானங்கள் !
1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவின் முதல் விமானப்படை நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் இவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படையின் நிறுவன தினமாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய விமானப்படையின் நிறுவன தினக் கொண்டாட்டங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தும் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு, 92 ஆவது ஆண்டு விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் விமான கண்காட்சி, அக்டோபர் 8 ஆம் தேதியில் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறவுள்ளது.
இதற்கு முந்தைய கொண்டாட்டங்கள் சண்டிகர் மற்றும் பிரயாக்ராஜில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொண்டாட்டத்தின்போது, இந்திய விமானப்படை அணிவகுப்பு, சென்னையில் காலை 7.45 மணியளவில் தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணிவகுப்பைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் ஒரு பிரமாண்டமான விமானக் கண்காட்சி நடைபெறும் என்றும், இதில் இந்திய விமானப்படையை சேர்ந்த ரஃபேல், சூகோய், தேஜாஸ் உள்ளிட்ட முன்னணி போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. அதோடு ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்தவுள்ளது.சென்னையில் இந்த வரலாற்று நிகழ்வு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Also Read
-
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!
-
நவம்பர் மாதம் முதல்... 4 மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?
-
உடன்பிறப்பே வா : 2000+ கழக நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர்... கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!
-
திமுக 75 அறிவுத்திருவிழா : ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
"திமுகவை போல் இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!