Tamilnadu
”திராவிட மாடல் அரசை பார்த்து அஞ்சும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
இந்தியாவிலேயே நமது திராவிட மாடல் அரசை பார்த்து ஒன்றிய அரசு அஞ்சுகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன்,”ஒன்றியத்தில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க ஒரு மாநில அரசை பார்த்து பயப்படுகிறது, அச்சப்படுகிறது என்றால் அது நமது திராவிட மாடல் அரசுதான்.
ஒன்றிய அரசின் மாதவாத அரசியலை துணிச்சலுடன் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்த்து வருகிறார். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து வஞ்சித்து வருகிறது பா.ஜ.க அரசு.
தி.மு.க ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகளில் புதிய பாலங்கள், புதிய சாலைகள், தடுப்பணைகள், ஏரி-கால்வாய் தூர் வாருவது அனைத்தும் செய்து முடித்துள்ளோம். காட்பாடி தொகுதியில் சிப்காட் அமைப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!