Tamilnadu
இந்த விவரங்களை வெளியிட நீங்கள் தயாரா? : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி!
சென்னை எழும்பூர் மண்டல அரசு கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசினர் கண் மருத்துவமனையில் 39-ஆவது கண் தான இருவார விழா மற்றும் கண்தானம் செய்த நல்லுள்ளங்களை சிறப்பிக்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”ஞஒரு துறையில் என்ன நடக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்து கொள்ள வேண்டும். அ.தி.முக ஆட்சியில் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால் 116 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஒருவர் மன உளைச்சல் காரணமாக உயிரிழந்தார்.
எந்த ஆட்சியிலும் இப்படி நடந்தது கிடையாது. கடந்த அதிமுக ஆட்சியில்தான் இதுபோன்றுநடைபெற்றது. கடந்த ஆட்சியில் 2000 பேரை முறையாக மருத்துவத்துறையில் பணியில் அமர்த்த வில்லை. முதல்முறையாக பணி ஆணை பெறுபவர்களிடம் விருப்ப கலந்தாய்வு அதிமுக ஆட்சியில் நடத்தப்படவில்லை.
ஆனால் தி.மு.க ஆட்சியில் மருத்துவர்களுக்கு எந்த பகுதியில் பணி வேண்டும் என்று கேட்டு அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் 6,744 மருத்துவத் துறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 36,000 பேருக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் 10 ஆண்டுகளில் மருத்துவத்துறை பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் விவரங்களை, கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் அளித்த விவரங்களை எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும். அவர் ஆட்சி காலத்தில் அவரும் அமைச்சர்களும் எந்தெந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள் என்ற விவரங்களும் தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 முதல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் தொடங்கப்போகிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“ரயில் பயணிகளை சாலைக்கு துரத்தும் மோடி அரசு” : கட்டண உயர்வுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!