Tamilnadu
தொடர் விடுமுறை... தமிழ்நாடு அரசு சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம் - விவரம் ?
தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயக சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 06/09/2024 (வெள்ளிக் கிழமை முகூர்த்தம்) 07/09/2024 (சனிக்கிழமை விநாயக சதுர்த்தி), 08/09/2024 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 05/09/2024, 06/09/204 மற்றும் 07/09/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 05/09/2024, 06/09/2024 (வெள்ளிக் கிழமை) மற்றும் 07/09/2024 (சனிக் கிழமை) ஆகிய நாட்களில் 1030 பேருந்துகளும், மற்றும் 08/09/2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 06/09/2024 (வெள்ளிக் கிழமை மற்றும் 07/09/2024 (சனிக்கிழமை) அன்று 190 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 06/09/2024 வெள்ளிக்கிழமை மற்றும் 07/09/2024 (சனிக்கிழமை) அன்று 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் , ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 23,514 பயணிகளும் சனிக்கிழமை அன்று 6,961 பயணிகளும் ஞாயிறு அன்று 21,650 பயணிகளும் பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
Also Read
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!
-
டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?