Tamilnadu
”திராவிட மாடல் திட்டத்தால் தாய்மார்களின் உள்ளம் கவர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : அமைச்சர் துரைமுருகன்
”இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களால் எம்.ஜி.ஆருக்கு பிறகு தாய்மார்களின் உள்ளம் கவர்ந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்” என அமைச்சர் துரைமுருகன் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ”கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் நமது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமுன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி வாகையை நாம் சூடியுள்ளோம்.
இதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று நேர்ந்துள்ளது. அதனால்தான் நாம் இத்தகைய வெற்றியை பெற்று இருக்கிறோம்.
நமது திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து நல்லப் பலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களால் எம்.ஜி.ஆருக்கு பிறகு தாய்மார்களின் உள்ளம் கவர்ந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’