Tamilnadu
"கலைஞருக்கு ஒரு கோட்டையை கட்டியிருக்கிறார் எ.வ.வேலு" : நூல் வெளியிட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி புகழாரம்
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியிட்டு விழா சென்னை கலைவானர் அரங்கில் நடைப்பெற்று வருகிறது. நூலின் முதல் பிரதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக வரவேற்புரையாற்றிய அமைச்சர் உயநிதி ஸ்டாலின்,”எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் என்று தலைவர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் பாராட்டுகளை பெற்றவர் இந்த நூலின் மூலம் எழுத்திலும் வல்லவர் என்று நிரூபித்திருக்கிறார்.
திருவண்ணாமலையை தி.மு.க-வின் கோட்டையாக மாற்றிக் காட்டியவர் அமைச்சர் எ.வ.வேலு. திராவிட மாடல் அரசின் பல்வேறு கட்டமைப்புகளை கட்டியெழுப்பியவர் இன்று சொற்களால் கலைஞருக்கு ஒரு கோட்டையை கட்டியிருக்கிறார்.
தலைவர் கலைஞர் பற்றி பல்வேறு நூல்கள் வந்துள்ளது. ஆனால் முதன்முதலாக தலைவர் கலைஞரை தாயோடு ஒப்பிட்டு, “கலைஞர் எனும் தாய்” நூலை எழுதியுள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. பெண்கள் மட்டும் தாய் அல்ல; வீரமுள்ள ஆண் மகன்களும் தாய்மை அடைவது உண்டு என்ற கலைஞர் சொல்லியிருக்கிறார். அந்தவகையில் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை தாய் என்று சொல்வது மிகவும் பொருத்தமானது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!