Tamilnadu
”வரலாற்றைத் திரிக்கும் முயற்சி” : நியாயவிலைக் கடைகளின் பெயரை மாற்றும் ஒன்றிய அரசுக்கு கனிமொழி கண்டனம்!
மக்களின் பசியைப் போக்க நாட்டிலேயே முதல் முறையாக 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை நிறுவி, பொது விநியோக முறையை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான். அதன் பிறகுதான் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போதும் சரி இப்போதும் சரி தி.மு.க அரசின் திட்டங்கள் தான் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது. கொரோனா காலத்தில் கூட நியாயவிலைக் கடைகள்தான் மக்களின் பசியை போக்கியது. அந்த அளவிற்கு எப்போதும் அடித்தட்டு மக்களின் பசியை போக்கி வருவது நியாயவிலைக்கடைகள்தான்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளின் பெயரை மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவிற்கு நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் கனிமொழி எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், மாநில மக்களின் பசிப்பிணிப் போக்க, நாட்டிலேயே முதல்முறையாக 1972ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை நிறுவி, பொது விநியோக முறையை சமூக பரவலாக்கம் செய்தவர் நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி தலைவர் கலைஞர் அவர்கள்.
இன்று இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பொது விநியோக முறையின் முன்மாதிரியே தமிழ்நாட்டின் நியாயவிலைக் கடைகள்தான். ஆனால், இந்த திட்டங்களைத் தொடங்கியதில் துளியும் பங்கில்லாத ஒன்றிய பாஜக அரசோ, நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளின் பெயரை ‘ஜன் போஷான் கேந்த்ராஸ்’ என்று மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது வரலாற்றைத் திரிக்கும் முயற்சி" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!