Tamilnadu
மாணவர்களுக்கு தாய் - தந்தையாக இருப்பவர் நம் முதலமைச்சர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 855 மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர்கள்
மதன் மோகன், எ.ஆர்.பி.எம். காமராஜ் மற்றும் மாவட்ட , பகுதி , வட்ட கழக நிர்வாகிகள் பல்வேறு அணியை சார்ந்த நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
“4வது ஆண்டாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று எனக்கு இருந்திருந்தாலும் கல்வி உதவி வழங்கும் இந்நிகழ்ச்சி என் மனதுக்கு நெருக்கமான நெகிழ்ச்சி.
நான் அதிகம் கல்வி உதவித்தொகை வழங்குவதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார். ஆனால், என்னை விட அதிகமாக முதலமைச்சர், கல்வி உதவித்தொகை அவருடைய தொகுதிக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வழங்குபவராக இருக்கிறார்.
பெண்கள் படிக்க வேண்டும், உயர்கல்வி பயில வேண்டும், வீட்டை விட்டு வெளியே பள்ளிக்கு வரவேண்டும் என்று காலை சிற்றுண்டி திட்டம், புதுமைபெண் திட்டம் தொடங்கப்பட்டது போல தமிழ்ப் புதல்வன் திட்டமும் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
இந்தியா கூட்டணி 40/40 வெற்றி பெற்றது என்றால் வாக்காளர் பெருமக்கள் ஆகிய நீங்கள் தான், அதற்கு காரணம். மத்திய சென்னையிலுள்ள தொகுதிகளில் அதிகவாக்குகள் வாங்கிகொடுத்த தொகுதி திருவல்லிக்கேணி தான்.
சென்ற ஆண்டு 600 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினோம். இந்த ஆண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு ரூ. 10ஆயிரம் கல்லூரி மாணவ மாணவியருக்கு ரூ. 20ஆயிரம் என
மொத்தம் 855 மாணவ, மாணவியருக்கு ரூ. 1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை வழங்கயுள்ளோம்.
4 ஆண்டுகளில் ரூ. 2 கோடியே 43 லட்சம் கல்வி உதவித்தொகை 2000 மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம். மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு தான் முக்கியம். ஒரு தாயாக தந்தையாக நம் முதலமைச்சர் அவர்கள் எப்போதும் உடனிருப்பார். உங்களுக்காக கல்வி உதவி செய்ய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும்” என தெரிவித்தார்.
Also Read
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது : “ஒரு போர்க் குற்றமாகும்...” - முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!