Tamilnadu
”தமிழ்நாட்டை விட்டு எச்.ராஜாவை மக்கள் வெளியேற்றுவார்கள்” : செல்வப்பெருந்தகை பதிலடி!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக வஞ்சிக்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாடு எம்.பிக்கள் ஒன்றிய பா.ஜ.க அரசை கடுமையாக கண்டித்துள்ளனர்.
குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். அதேபோல் பொதுமக்களும் ஒன்றிய அரசை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ”பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிதி கொடுக்காதது சரியே என தனது வன்மத்தை பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கக்கியுள்ளார். இதையடுத்து இவரது கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,”ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிதி கொடுக்காதது சரியே என கூறிய எச்.ராஜாவை தமிழக மக்களே தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றுவார்கள். தேர்தல் மக்களை பார்த்து கையெழுத்து கும்பிட்டு விட்டு தற்போது இப்படி பேசுவது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் துரோகம்.” என விமர்சித்துள்ளார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!