Tamilnadu
137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக நீர் திறந்து விட சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் T.M.செல்வகணபதி அவர்களிடமும், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் அவர்களிடமும், விவசாய சங்கங்களை சார்ந்தவர்களும், விவசாய பெருமக்களும் நேரில் வந்து கேட்டுக் கொண்டதற்கிணங்க,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று அதனை பரிசீலித்தப் பின் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்கு 30.07.2024 முதல் நீர் திறந்து விட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் முறையே 27000 ஏக்கரும், 18000 ஏக்கரும் ஆக மொத்தம் 45000 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. இவற்றில் சேலம் மாவட்டத்தில் 16443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக நீர் திறந்து விட விவசாய சங்கங்களை சார்ந்தவர்களும், விவசாய பெருமக்களும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரை கேட்டுக் கொண்டுள்ளதாலும் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடிக்கு மேல் உள்ளதாலும், 2024-2025-ஆம் பாசன ஆண்டில் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்களுக்கு, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் 30.07.2024 முதல் 13.12.2024 வரை 137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.
Also Read
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!