Tamilnadu
மேற்கு வங்கம் To சென்னை... கைப்பையில் இருந்த கஞ்சா... சோதனையில் சிக்கிய பெண்... - நடந்தது என்ன?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு இரும்பு பாதை போலீசார் வழக்கம்போல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நடைமேடை 5-ல் ஹவுரா விரைவு வண்டியில் புவனேஸ்வரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்து கோழிக்கோடு செல்வதற்கு மங்களூர் விரைவு வண்டியில் மங்களூரில் இருந்து வரக்கூடிய மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இதனால் அவரை அழைத்த போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது அவரது பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளது. இதையடுத்து அவரது கையில் வைத்திருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பறிமுதல் செய்த கஞ்சாவை எடைபோட்டு பார்த்தபோது, அது 5 கிலோ என்று கண்டறியப்பட்டது. பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த பெண் மேற்கு மாநிலம் பரத மான் பகுதியைச் சேர்ந்த தரிகா பேகம் (31) என்பது தெரியவந்தது. தற்போது அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Also Read
- 
	    
	      
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
 - 
	    
	      
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!
 - 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
 - 
	    
	      
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
 - 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!