Tamilnadu
கொழுந்துவிட்டு எரிந்த சொகுசு பேருந்து : உயிர் தப்பிய 30 பேர் - நடந்தது என்ன?
திருவண்ணாமலையில் இருந்து 30 பயணிகளுடன் கோவை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து இன்று அதிகாலை கோவை அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது பேருந்தில் இருந்து திடீரென புகை வருவதை பார்த்த ஓட்டுநர் உடனே சாலை ஓரமாக பேருந்தை நிறுத்தினார். பின்னர் பயணிகள் கீழே இறங்கிய சில நிமிடத்திலேயே பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
பின்னர் இது குறித்து பீளமேடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது.
இது குறித்து பீளமேடு காவல் துறையினர் டீசல் கசிவு அல்லது குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதா? என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!